விராட் கோலியும் எதிர் பாராது தாக்கிய எரிகல்லும்
திருமணமாகி பத்து பதினைந்து ஆண்டுகள் ( பத்தா பதினைந்தா…இது கூட சரியா தெரியவில்லை - சரியாக சொன்னால் பதினேழு - இதைப்படித்தால் இப்படித்தான் சொல்வாள்) ஆன பின்னர் மனைவியின் ஒவ்வொரு அசைவிற்க்குமான அர்த்தத்தைப் புரிந்து கொள்வது சுலபம்தான். இருந்தாலும் சில சமயம் எதிர்பாராமல் அடிபட்டு நிலைகுலைந்து போவதும் உண்டு. ஆயிரமாயிரம் ஆண்டுகள் அமைதிக்குப்பின்னர் சட்டென்று எரிகல்லால் தாக்கப்படும் பூமிபோல. நேற்று அப்படித்தான் நடந்தது. ஞாயிற்று கிழமை. வழக்கம் போல வேலை அதிகம். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் லைவ் மாட்ச் சரியாக பார்க்கமுடியவில்லை. எனக்கு பிடித்த விராட் கோலி வேறு நீண்ட நாட்களுக்கு அப்புறம் சதம் அடித்திருந்தான். சரி ஹைலைட்ஸ் ஆவது பார்ப்போமே என்று குழந்தையை தூங்க வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்கு சாப்பாட்டை தட்டில் எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தேன். டிவி பார்க்காமல் மனைவி ஏதோ தீவிரமாக( அப்படி நினைத்துதான் மாட்டிக்கொண்டேன்) படித்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக இது அவளின் டிவி நேரம். நான் மொபைலில் தான் கிரிக்கெட் பார்ப்பேன். அவளுக்கு கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது. நான் கிரிக்கெட் பார்ப்பத...