Uttarakhand Bike Trip 22 Part 1
Valley of flowers( VOF) trek பயண யோசனை சட்டென்று உருவானது - பெரிதாக திட்டமிடல் எதுவும் இல்லாமலேயே. விநாயக சதுர்த்திக்கு சில நாட்கள் நாக்பூர் செல்ல வேண்டும் என்று பிராஞ்சலி சொல்லிய மறு வினாடியே மனதில் தோன்றியது. VOF என்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் இருந்திருந்தாலும் - அங்கு செல்ல இவ்வளவு சீக்கிரம் முடிவெடுத்தது ஆச்சரியமாகவே இருந்தது. அதற்க்கு சமீபத்தில் படித்த உத்தராகண்ட்டின் மலைகளில் அலைந்து திரியும் - “ மைத்ரி “ நாவல் ஒரு முக்கியமான உந்துதலாக இருந்திருக்க வேண்டும். முதலில், அந்த நாவலில் வருவது போலவே தனியனாக செல்லத்தான் யோசித்தேன் - துணைக்கு மைத்ரி கிடைப்பாள் என்ற நப்பாசையாலோ என்னவோ. இருந்தாலும் கேட்டு பார்ப்போமே என்று பயண விவரத்தை செயலற்று- இறக்கும் தருவாயில் - கிடக்கும் ZNMD க்ரூப்பில் பகிர்ந்தேன். இந்த மாதிரி பயணங்களில் அன்று தொடங்கி இன்று வரை Goa சென்ற அந்த நான்கு bikomaniacs மட்டுமே ஆர்வமுள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. புதிதாக கிளம்பியுள்ள இன்னொருவன் கதிர். அவன் அதே சமயத்தில் லே, லடாக் செல்லும் உற்சாகத்தில் இருந்தான். சங்கரும் கார்த்தியும் வர முடியாத சூழல். அர்வ...