Posts

Showing posts from 2022

Uttarakhand Bike Trip 22 Bloopers ☺☺☺

Image
1. கரியாகிப்போன Riding Jacket வாங்கி எட்டு வருஷம் ஆச்சே- பல பைக் trip போய் வந்தாச்சே- ஒரு முறையாவது Riding Jacket க்கு தண்ணிய காட்டுவோமே என்ற நல்ல எண்ணத்தில் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தேன். அதிலிருந்து கருப்பு கட்டிகளும் மாவு மாதிரி கரிய நிற துகள்களும் jacket -ந் முதுகுப்பகுதியிலிருந்து கொட்ட ஆரம்பித்துவிட்டது. Airport, aeroplane, taxi என்று சென்ற இடமெல்லாம் கருப்பு பெளடரால் நாசம். டெஹ்ராடுன் வந்த பிறகுதான் இரண்டு பைக் experts(  நம்ம ஆளுங்கதான்)அதற்க்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள். “தம்பி அந்த riding jacket ல் இருக்கும் pads ஐ எல்லாம் துவைக்கறதுக்கு முன்னாடி எடுத்து தனியா வச்சுரனும்னு தெரியாதா” என்று கேட்டனர். முன்ன பின்ன இதையெல்லாம் துவைச்சிருந்தாதானே தெரிஞ்சிருக்கும் ம்ம்ம்ஹீம்ம்ம்ம் 2. I am a biker boy   நாங்கெல்லாம் bike rider ஆக்கும் என்று மற்றவர்களிடம் பீத்திக்கொள்ள Royal Enfield டி ஷர்ட்கள் இரண்டு மூன்று வாங்கியிருந்தேன். அன்று அதில் ஒன்றை அணிந்திருந்தேன். நாக்பூர் ஏர்போர்ட்டில் அடையாள அட்டையை சரிபார்த்து உள்ளே அனுமதிக்கும் ராணுவ சிப்பாய் ஒருவன் கேட்டான் பாருங்க ஒரு...

Uttarakhand Bike Trip 22 Final Part ( Chopta Tunganath)

Image
  இருட்டில் ஆட்களே இல்லாத அந்த காட்டுப்பாதையில் நடந்து வரும்பொழுது  சிறிதளவும் அச்சமோ நம்மிக்கையின்மையோ ஏற்படவில்லை. மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். அந்த எளிய மனிதர்களின் நேர்மையைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். யாரென்றே தெரியாத ஒருவனிடம் பைகளை கொடுத்து விட்டால் சரியாக சென்று சேர்கிறது. ஒன்றும் காணாமல் போவதில்லை. அதிகம் பணம் கேட்டு பேரம் பேசுவதில்லை.ஒரு ரூபாயைக் கூட கணக்கு பார்த்து சரியாக திருப்பி தருகிறார்கள். அடுத்த நாள் உணவே நிச்சயம் இல்லாத போதும் மனசாட்சி உள்ளவர்களாக உள்ளனர். இந்தியாவின் ஆன்மா இவர்களைப்போன்ற எளிய மனிதர்கள்தான். நாளை அர்விந்தும் செந்திலும் திரும்ப செல்கிறார்கள். மூன்று நாட்களுக்கு தனியாக பைக் பயணம். செப்டெம்பர் 5 நீண்ட நேரம் உறங்கி தாமதமாக விழித்து இலக்கு இல்லாமல் பயணம் செய்வதிலும் ஒரு சுகம் உள்ளது. இன்று அருகிலுள்ள ஒளலி (auli) என்ற இடத்திற்க்கு செல்ல முடிவெடுத்தேன். ஜோஷிமட் வழியாக சென்று கொண்டிருந்தேன். வழியில் முதுகுப்பையுடன் ஒரு இளைஞன் லிப்ட் கேட்டான். குஜராத்திலிருந்து தனியாக பஸ் பயணங்களின் மூலமாகவே வந்திருக்கிறான். Vof யையும் ஹேம்குந்த் சாஹிப்பையும்...

Uttarakhand Bike Trip 22 Part 3 ( Valley of Flowers)

Image
  பள்ளத்தாக்கு பகுதிகளின் கால நிலை அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. தூறல் நின்று சீக்கிரம் வெயில் வரும் என்ற நம்பிக்கையுடன் vof trek ஐ தொடங்கினோம். ஒரு பெரிய backpack ஐ முதுகில் கட்டிக்கொண்டு போட்டாவுக்காக போஸ் கொடுத்தோம் . பிறகு அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மிகச்சிறிய கனம் குறைந்த பைகளை எடுத்துக்கொண்டு மலை ஏற ஆரம்பித்தோம்!! மணி 7. அப்பொழுதும் மேக மூட்டத்துடன் லேசாக தூறிக்கொண்டுதான் இருந்தது. சிறிது தூரத்திலேயே ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பாதை பிரிந்தது. நாங்கள் vof நோக்கி இருபுறமும் அடர்ந்த செடிகள் கொண்ட பாதையில் புகுந்தோம். நுழைவாயிலில் ஒரு சிறிய அலுவலகம் உள்ளது. காலை ஏழு மணி முதல் நண்பகல் 12 மணி வரையே vof உள்ளே செல்ல அனுமதி. மாலை ஐந்து மணிக்குள் திரும்பிவிட வேண்டும். இல்லையேல் காணாமல் போனவர் பட்டியலில் சேர்த்துவிடுவர். இந்தப் பாதையில் கோவேறு கழுதைகள் அனுமதிக்கப்படுவதில்லை. மலை ஏற முடியாதவர்களை கூடைகளில் வைத்து ஆட்கள்தான் சுமந்து செல்கிறார்கள். நாங்கள் சற்று பருமனான ஒரு வயதான தமிழ் பேசும் அம்மாவைப் பார்த்தோம். கட்டில் போன்ற ஒன்றில் அமரவைத்து நான்கு பேர் தூக்கிச் சென்றனர். இந்த வழியில்...

Uttarakhand Bike Trip 22 Part 2

Image
ரிஷிகேஷிலிருந்து கோவிந்த் காட் செல்லும் முதன்மை (main) சாலை அகலமான NH 7. அது கங்கை நதியின் மூல நதியில் ஒன்றான அலகானந்தாவை இணைபிரியாமல் அது தோன்றுமிடமான பத்ரிநாத் ( கோவிந்த் காட் டிலிருந்து இன்னும் மேலே செல்ல வேண்டும்) வரை நீள்கிறது. வழியில் கிளை நதிகள் அலகானந்தாவில் சேரும் ஐந்து முக்கியமான இடங்கள் உள்ளன. விஷ்ணு ப்ரயாகில்- டெளலி கங்கா நந்தா ப்ர யாகில்- நந்தாகினி கர்ன ப்ரயாகில் - பிண்டார் ருத்ர ப்ரயாகில் - மந்தாகினி இறுதியில் தேவ் ப்ரயாகில் பாகிரதி நதியுடன் இணைந்து அலகானந்தா கங்கையாகிறது. அந்த முதன்மை வழியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. பயணத்தின்போது ஏற்படும் இதுபோன்ற எதிர்பாராத சிறு தடங்கல்கள் அப்போதைக்கு மன வருத்தத்தை அளித்தாலும், பின்பு யோசிக்கும் போது பயணக்கதைக்கு அவை மேலும் சுவை சேர்ப்பவையாகவே உள்ளன. உண்மையை சொல்லப்போனால் நிலச்சரிவு நாங்கள் எதிப்பார்க்காத ஒன்றல்ல.குறிப்பாக மழைக்காலங்களில் இது ஒரு சாதாரணமான நிகழ்வு. இமய மலையின் நில அமைப்பு அப்படி. அதற்க்கு காரணங்கள் பல. அருகில் டாக்ஸி ஓட்டுனர்கள் ஒன்றாகக்கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்து, இன்னொரு ( வடக்கு நோக்கி தெஹ்ர...

Uttarakhand Bike Trip 22 Part 1

Image
  Valley of flowers( VOF) trek பயண யோசனை சட்டென்று உருவானது - பெரிதாக திட்டமிடல் எதுவும் இல்லாமலேயே. விநாயக சதுர்த்திக்கு சில நாட்கள் நாக்பூர் செல்ல வேண்டும் என்று பிராஞ்சலி சொல்லிய மறு வினாடியே மனதில் தோன்றியது. VOF என்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் இருந்திருந்தாலும் - அங்கு செல்ல இவ்வளவு சீக்கிரம் முடிவெடுத்தது ஆச்சரியமாகவே இருந்தது. அதற்க்கு சமீபத்தில் படித்த  உத்தராகண்ட்டின் மலைகளில் அலைந்து திரியும் - “ மைத்ரி “ நாவல் ஒரு முக்கியமான உந்துதலாக இருந்திருக்க வேண்டும். முதலில், அந்த நாவலில் வருவது போலவே தனியனாக செல்லத்தான் யோசித்தேன் - துணைக்கு மைத்ரி கிடைப்பாள் என்ற நப்பாசையாலோ என்னவோ. இருந்தாலும் கேட்டு பார்ப்போமே என்று பயண விவரத்தை செயலற்று- இறக்கும் தருவாயில் - கிடக்கும் ZNMD க்ரூப்பில் பகிர்ந்தேன். இந்த மாதிரி பயணங்களில் அன்று தொடங்கி இன்று வரை Goa சென்ற அந்த நான்கு bikomaniacs மட்டுமே ஆர்வமுள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. புதிதாக கிளம்பியுள்ள இன்னொருவன் கதிர். அவன் அதே சமயத்தில் லே, லடாக் செல்லும் உற்சாகத்தில் இருந்தான். சங்கரும் கார்த்தியும் வர முடியாத சூழல். அர்வ...