Uttarakhand Bike Trip 22 Bloopers ☺☺☺
1. கரியாகிப்போன Riding Jacket வாங்கி எட்டு வருஷம் ஆச்சே- பல பைக் trip போய் வந்தாச்சே- ஒரு முறையாவது Riding Jacket க்கு தண்ணிய காட்டுவோமே என்ற நல்ல எண்ணத்தில் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தேன். அதிலிருந்து கருப்பு கட்டிகளும் மாவு மாதிரி கரிய நிற துகள்களும் jacket -ந் முதுகுப்பகுதியிலிருந்து கொட்ட ஆரம்பித்துவிட்டது. Airport, aeroplane, taxi என்று சென்ற இடமெல்லாம் கருப்பு பெளடரால் நாசம். டெஹ்ராடுன் வந்த பிறகுதான் இரண்டு பைக் experts( நம்ம ஆளுங்கதான்)அதற்க்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள். “தம்பி அந்த riding jacket ல் இருக்கும் pads ஐ எல்லாம் துவைக்கறதுக்கு முன்னாடி எடுத்து தனியா வச்சுரனும்னு தெரியாதா” என்று கேட்டனர். முன்ன பின்ன இதையெல்லாம் துவைச்சிருந்தாதானே தெரிஞ்சிருக்கும் ம்ம்ம்ஹீம்ம்ம்ம் 2. I am a biker boy நாங்கெல்லாம் bike rider ஆக்கும் என்று மற்றவர்களிடம் பீத்திக்கொள்ள Royal Enfield டி ஷர்ட்கள் இரண்டு மூன்று வாங்கியிருந்தேன். அன்று அதில் ஒன்றை அணிந்திருந்தேன். நாக்பூர் ஏர்போர்ட்டில் அடையாள அட்டையை சரிபார்த்து உள்ளே அனுமதிக்கும் ராணுவ சிப்பாய் ஒருவன் கேட்டான் பாருங்க ஒரு...