Posts

Showing posts from 2023

விராட் கோலியும் எதிர் பாராது தாக்கிய எரிகல்லும்

Image
  திருமணமாகி பத்து பதினைந்து ஆண்டுகள் ( பத்தா பதினைந்தா…இது கூட சரியா தெரியவில்லை - சரியாக சொன்னால் பதினேழு - இதைப்படித்தால் இப்படித்தான் சொல்வாள்) ஆன பின்னர் மனைவியின் ஒவ்வொரு அசைவிற்க்குமான அர்த்தத்தைப் புரிந்து கொள்வது சுலபம்தான். இருந்தாலும் சில சமயம் எதிர்பாராமல் அடிபட்டு நிலைகுலைந்து போவதும் உண்டு. ஆயிரமாயிரம் ஆண்டுகள் அமைதிக்குப்பின்னர் சட்டென்று எரிகல்லால் தாக்கப்படும் பூமிபோல.   நேற்று அப்படித்தான் நடந்தது. ஞாயிற்று கிழமை. வழக்கம் போல வேலை அதிகம். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் லைவ் மாட்ச் சரியாக பார்க்கமுடியவில்லை. எனக்கு பிடித்த விராட் கோலி வேறு நீண்ட நாட்களுக்கு அப்புறம் சதம் அடித்திருந்தான். சரி ஹைலைட்ஸ் ஆவது பார்ப்போமே என்று குழந்தையை தூங்க வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்கு சாப்பாட்டை தட்டில் எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தேன். டிவி பார்க்காமல் மனைவி ஏதோ தீவிரமாக( அப்படி நினைத்துதான் மாட்டிக்கொண்டேன்) படித்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக இது அவளின் டிவி நேரம். நான் மொபைலில் தான் கிரிக்கெட் பார்ப்பேன். அவளுக்கு கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது. நான் கிரிக்கெட் பார்ப்பது அதைவிட

நண்பகல் நேரத்து மயக்கம் - Lijo Pellissery

Image
  ( Spoiler alert! - please watch the movie before reading this ) லிஜோ பெல்லிஸ்ஸெரி - இவரை இந்திய மாற்றுச்சினிமாவின் முகம் என்று சொல்லலாம். இவரின் ஒவ்வொரு படமும் ஒருவிதம்; பெரும்பாலும் எல்லாமே சோதனை முயற்ச்சிகள். இருந்தும் முழுவதுமாக ரசிக்கக் கூடியவைகள். அவரின் முந்தைய படமான churuli மட்டும் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. இவரின் படம் எப்பொழுது வெளியாகும் என காத்திருக்கும் தனி ரசிகர் வட்டமுண்டு இவருக்கு. ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம், தான் லிஜோவின்  ரசிகன்  என்று சொன்னதாக ஞாபகம். இந்த படமும் அவரின் பெரும்பாலான படங்களைப்போலவே எஸ் ஹரீஸ்ஸின் சிறுகதையை மூலமாகக் கொண்டதுதான். கதை. மலையாள கிறிஸ்து ஜேம்ஸ், தன் மனைவி, மகன் மற்றும் ஊர்காரர்களுடன் சேர்ந்து குழுவாக வேளாங்கண்ணி புனித யாத்திரையை முடித்துவிட்டு ஒரு வேனில் ஊர் திரும்புகிறார். அவருக்கு தமிழ் சாப்பாடு பிடிக்காது;தமிழ் பாடல்கள் பிடிக்காது; தமிழ் பேசத்தெரியாது; குடிக்க மாட்டார். வண்டி தமிழ் நாட்டின் வழியாக சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு நண்பகல் நேரம். எல்லாரும் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டுநரும் பாதி தூக்கத்தி