Uttarakhand Bike Trip 22 Part 2
ரிஷிகேஷிலிருந்து கோவிந்த் காட் செல்லும் முதன்மை (main) சாலை அகலமான NH 7. அது கங்கை நதியின் மூல நதியில் ஒன்றான அலகானந்தாவை இணைபிரியாமல் அது தோன்றுமிடமான பத்ரிநாத் ( கோவிந்த் காட் டிலிருந்து இன்னும் மேலே செல்ல வேண்டும்) வரை நீள்கிறது. வழியில் கிளை நதிகள் அலகானந்தாவில் சேரும் ஐந்து முக்கியமான இடங்கள் உள்ளன. விஷ்ணு ப்ரயாகில்- டெளலி கங்கா நந்தா ப்ர யாகில்- நந்தாகினி கர்ன ப்ரயாகில் - பிண்டார் ருத்ர ப்ரயாகில் - மந்தாகினி இறுதியில் தேவ் ப்ரயாகில் பாகிரதி நதியுடன் இணைந்து அலகானந்தா கங்கையாகிறது. அந்த முதன்மை வழியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. பயணத்தின்போது ஏற்படும் இதுபோன்ற எதிர்பாராத சிறு தடங்கல்கள் அப்போதைக்கு மன வருத்தத்தை அளித்தாலும், பின்பு யோசிக்கும் போது பயணக்கதைக்கு அவை மேலும் சுவை சேர்ப்பவையாகவே உள்ளன. உண்மையை சொல்லப்போனால் நிலச்சரிவு நாங்கள் எதிப்பார்க்காத ஒன்றல்ல.குறிப்பாக மழைக்காலங்களில் இது ஒரு சாதாரணமான நிகழ்வு. இமய மலையின் நில அமைப்பு அப்படி. அதற்க்கு காரணங்கள் பல. அருகில் டாக்ஸி ஓட்டுனர்கள் ஒன்றாகக்கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்து, இன்னொரு ( வடக்கு நோக்கி தெஹ்ர...